Pages

Saturday, 6 June 2015

Tnpsc maths - Dice

Hi Friends,

For every tnpsc exam, one question asked from dice problem. So we here explained some tricks in dice.



A dice thrown 4 times produced the following results which num number 3? 




Tnpsc தேர்வில் பகடையின் முகப்பக்கத்தை கொடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.ஆகையால் அதைப்பற்றிய எமக்கு தெரிந்த நுணுக்கங்களைக் காண்போம்.

DICE6

பகடை ஒரு கனசதுரம் ஆகும். அதற்கு ஆறு பக்கங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

ABCG, GCDE, DEFH, BCDH, AGEF மற்றும் ABHF.


dice5

எப்போதுமே ஒரு பக்கத்திற்கு நான்கு பக்கங்கள் அடுத்துள்ள பக்கமாக அமையும்.

இங்கு ABCG க்கு எதிர்ப்பக்கம்  DEFH ஆகும்.

CDEG என்பது மேல் பக்கமாகும்.

ABHF  என்பது கீழ் பக்கமாகும்.

1. இரண்டு எதிர் எதிர்ப் பக்கங்கள் அடுத்தடுத்த பக்கங்களாக அமையாது.
(Two opposite faces cannot be adjacent to one another)

dice1

ஒரு பகடையின் இரண்டு நிலைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. எண் 4 க்கு எதிராக உள்ள எண் எது?

எண் 4 க்கு 6,2,5 மற்றும் 3 அடுத்துள்ள பக்கங்களாக உள்ளதால், நான்கிற்கு எதிராக அமைய வாய்ப்பில்லை.


எனவே மீதம் உள்ள 1 தான் நான்கிற்கு எதிராக உள்ள எண் ஆகும்.

2. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு, அதில் இரண்டு எண்கள் இரண்டு நிலைகளிலும் அமைந்திருந்தால், 
மீதமுள்ள இரு எண்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமையும்.

(If two different positions of a dice are shown and one of the two common faces is in the same position then of the remaining faces will be opposite to each other)


dice2

5, 3 இங்கு கொடுக்கப்பட்ட இரு நிலைகளிலும் இருமுறை வந்துள்ளது.
மீதம் இருப்பது 2, 4. எனவே இந்த 2 மற்றும் 4 எதிர் எதிர் பக்கங்களாகும்.
3. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு எண் இரண்டுநிலைகளிலும் ஒரே முகப்பக்கத்தில் அமைந்திருந்தால், மற்ற முக பக்கத்திலுள்ள எண்கள் அடுத்த நிலையில் அதே இடத்தில் உள்ள எண்ணுக்கு எதிர் பக்கங்களாக அமையும்.

(If in two different positions of dice, the position of a common face be the same, then each of the opposite faces of the remaining faces will be in the same position)

dice3

இங்கு இரு நிலைகளிலும் 3 பொதுவாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
ஆகையால் 5, 6 எதிர்ப்பக்கம். 4, 2 உம் எதிர் எதிர் பக்கம்.

4. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு,பொதுவான பக்கத்தின் நிலைமாறியிருந்தால், 

மேலும் ஒரே ஒரு எண் மட்டும் விடுபட்டிருந்தால் அந்த விடுபட்ட எண்ணேபொதுவான பக்கத்திலுள்ள எண்ணின் எதிர்ப்பக்கம்.

(If in two different positions of a dice, the position of the common face be not the same, then opposite face of the common face will be that which is not shown on any face in these two positions. Besides, the opposite faces of the remaining faces will not be the same)

dice4

இங்கு 1 இன் இடம் இரு நிலைகளிலும் வெவ்வேறு இடத்தில் உள்ளது.
6 மட்டும் இந்த எண்களில் விடுபட்டுள்ளது. எனவே 1க்கு எதிர்ப்பக்கம் 6.

No comments:

Post a Comment